அதிர்ச்சி... காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் மரணம்!

 

குஜராத் மாநிலம் அம்ரேலியில்  கார் கதவுகள் தானாகவே பூட்டிக் கொண்டதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 குழந்தைகள் உயிரிழந்தனர். 

மத்திய பிரதேச மாநிலம் தார் பகுதியை சேர்ந்த விவசாய தொழிலாளி ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா கிராமத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். கடந்த 2-ந்தேதி காலை அவர், தனது மனைவி மற்றும் சில தொழிலாளர்களுடன் விவசாய வேலைக்காக காலையிலேயே சென்று விட்டார். அவர்களை நிலத்தின் உரிமையாளரே அழைத்து சென்றார்.

<a href=https://youtube.com/embed/Et3GECeVojo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Et3GECeVojo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

நில உரிமையாளரின் வீட்டு அருகே அந்த தொழிலாளியின் 4 குழந்தைகள் உள்பட 7 குழந்தைகள் அங்கு விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நின்ற காருக்குள், தொழிலாளியின் 4 குழந்தைகளும் ஏறி விளையாடினர். கார் கதவுகள் தானாகவே பூட்டிக்கொண்டதால், குழந்தைகளால் கதவை மீண்டும் திறக்கமுடியவில்லை.

நீண்ட நேரம் பூட்டிய காருக்குள் இருந்த 4 குழந்தைகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த பகுதியில் யாரும் இல்லாததால் நடந்த விபரீதம் பற்றி யாருக்கும் தெரியாமல் போயிற்று. சிறிது நேரத்தில் குழந்தைகள் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய தொழிலாளி தனது குழந்தைகளை தேடியபோது அவர்கள் காருக்குள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் கார் கதவை உடைத்து குழந்தைகளின் உடல்களை மீட்டனர். பலியான 4 குழந்தைகளும் 2 முதல் 7 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த சம்பவம் குறித்து அம்ரேலி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!