ஐப்பசி துவங்கிடுச்சு... இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

 
ராசிபலன்கள் ராசி ஜோதிடம்
நவக்கிரகங்களின் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் மாற்றம் ஏற்படும். குறிப்பாக சூரியபகவான் பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க காத்திருக்கிறது. அந்த வகையில் துலாம் ராசியில் சூரிய பகவான்  ஐப்பசி மாதத்தில் 8 நட்சத்திரத்தை சேர்ந்த நபர்களுக்கு மிகச் சிறப்பான ராஜயோகங்களை அள்ளித்தருகிறார்.  இன்று முதல்  நவம்பர் 16ம் தேதி வரை சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த ஐப்பசி மாதத்தில் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். சில நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு இதுவரை அனுபவித்து வந்த கஷ்டங்கள் விலகி அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. 

விசாகம்
துலாம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களின்  குரு நட்சத்திரமான விசாக நட்சத்திரக்காரர்கள் பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை கூடும்.  நிதிநிலை மேம்படுவதோடு சேமிப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டுக்கள் பதவி உயர்வு கிட்டும். இந்த மாதத்தில்  மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும்.

சூரியன்

ஆயில்யம்  

ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  ஐப்பசி மாதத்தில் செல்வ செழிப்பும், வாழ்க்கையில் முன்னேற்றமும் உண்டாகும்.  கடமைகளை சிறப்பாக நிறைவேற்றி முடிக்கும் காலகட்டம் இது. திருமணம், குழந்தை பாக்கியம், காதல் இதுவரை இழுபறியாக இருந்த விஷயங்கள் சுபமுடிவுக்கு வரும். பணவரவுகள் அதிகரிக்கும்.  தொழிலில் கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும்.  

அஸ்தம்
கன்னி ராசியில் சந்திரனை அதிபதியாக கொண்ட அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு  ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது.  செல்வ செழிப்பு பெருகும்.  கலைத்துறை, விளையாட்டு, கலாச்சாரம் போன்ற துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.  பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க மேன்மை பெறலாம்.  

பூசம்  
பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு  ஐப்பசி மாதத்தில் எதிர்பாராத பொருளாதார உயர்வு மற்றும் வெற்றிகள் குவியும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட காலமாக  தடைப்பட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கலாம்.  நீண்ட தூர பயணங்களால் பெரும் ஆதாயம் பெறலாம். கல்வியில் உயர்வும், தொட்டதெல்லாம் பொன்னாகக் கூடிய காலகட்டமாக அமையும்.  

அனுஷம்  
அனுஷம் நட்சத்திரக்காரர்களே  ஐப்பசி  மாதம் உற்சாகத்தை அள்ளித் தரப்போகிறது. பட்டபாட்டுக்கு பலனை அனுபவிக்கப் போகிறீர்கள். புதிய முயற்சிகளில் நற்பலன்களை பெறுவீர்கள்.சுபகாரியங்களில்  காரியத் தடை நீங்கும். உற்சாகம் கரைபுரண்டு ஓடும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த இழுபறி சுபமுடிவுக்கு வரும். நினைத்த காரியம் கைகூடும்.  

ராசிபலன் rasibalan astrology rasi

திருவோணம்  
திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு  நீண்ட நாட்களாக மனதில் இருந்த விருப்பங்கள் நிறைவேறும்.  குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் கைகூடும்.புதிய தொழில் தொடங்குவதற்கான சாதகமான காலகட்டம்.  தொலைதூர செய்திகளால் குடும்பத்தில் குதூகலம் பெருகும். 

பூராடம்  
பூராடம் நட்சத்திரக்காரர்களே  ஐப்பசி மாதத்தில் பணியிடத்தில் பதவி உயர்வு பாராட்டுக்கள் நிச்சயம். தொட்ட காரியம் துலங்கப் போகிறது. இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த  கருத்து வேறுபாடுகள் தீரும், பிரச்சனைகள் விலகி  வீட்டில் சுபமான நிகழ்வுகள் நடைபெறும். பெரியவர்களின் ஆசியால் பூர்வீக சொத்துக்களால் பலன்களை பெறுவீர்கள்.  

அஸ்வினி  
அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு  இதுவரை இருந்து நீண்ட கால பொறுப்புக்கள் குறைந்து நிம்மதி அடையும் காலம்.  தொட்டதெல்லாம் பொன்னாகும்.  கடின உழைப்பின் மூலம் நினைத்ததை அடைய முடியும். எதிர்பாராத விஷயங்களில் இருந்து  அதிர்ஷ்டம் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறலாம்.  பணியிடத்தில் சவால்களை சமாளித்து பாராட்டுக்களை பெறுவீர்கள்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை... கிடைக்கும் வாய்ப்பைத் தவற விடாதீங்க!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

From around the web