இந்தியாவிலேயே முதன் முறை... 13 ஆண்டுகள் படுக்கையில் கிடந்த இளைஞரை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி!
உத்தரப் பிரதேச மாநிலம் மொகாலியில் வசித்து வந்தவர் ஹரிஷ் ராணா. இவர் கடந்த 13 ஆண்டுகளாக சுயநினைவின்றி படுத்த படுக்கையாக கிடக்கிறார். இந்த இளைஞருக்கு கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹரிஷ் ராணா என்ற இளைஞர் 2013ம் ஆண்டு கல்லூரி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்தார். அதன் பின்னர் அவர் சுயநினைவின்றி நீண்ட காலமாக படுக்கையிலேயே இருந்து வருகிறார். அவரது தந்தை மகனின் துயரத்தை காண முடியாததால் கருணைக் கொலை அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் விசாரித்தனர். மருத்துவ அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவமனை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் ஹரிஷ் ராணாவின் உடலில் கடுமையான படுக்கைப் புண்கள் இருப்பதாகவும், அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் குறிப்பிடப்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு உயிர் காக்கும் கருவிகளை அகற்றி கருணை முறையில் உயிர் நீக்க சிகிச்சை வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஹரிஷ் ராணாவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ நடைமுறைகளின்படி சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 13 ஆண்டுகளாக மகனை பராமரித்த பெற்றோரின் அர்ப்பணிப்புக்கு நீதிமன்றம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இதுபோன்ற வழக்குகளுக்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!