உடலை அடக்கம் செய்து 18 மாதங்கள் கழித்து உயிருடன் வந்த இளம்பெண்!
மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சௌர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் லலிதா பாய். இவர் 2023 செப்டம்பர் மாதத்தில் மாயமான நிலையில் லலிதா பாய் லாரி விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்டார். அந்த விபத்தில் நசுங்கிய பெண்மணி ஒருவரின், கையில் இருந்த டாட்டூ மற்றும் காலில் இருந்த கருப்பு கயிற்றை வைத்து அவரது தந்தை லலிதா என அடையாளம் காண்பித்து, இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இது கொலை வழக்காக மாறி, நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால், 18 மாதங்கள் கழித்து, 2025 மார்ச் 11ம் தேதி, லலிதா பாய் திடீரென வீட்டுக்கு திரும்பி வந்தார். அவரை அவரது குடும்பத்தினர் உயிரோடு பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ச்சி அடைந்தனர். அவரது தந்தை, லலிதாவை உடனடியாக ஆதார் மற்றும் பிற அடையாள ஆவணங்களுடன் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றார். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அப்போது லலிதா பாய் “ ஷாருக்கான் என்ற நபருடன் விருப்பத்துடன் பன்புராவிற்கு சென்றதாகவும், ஆனால் இரண்டு நாட்களில் அவர் தன்னை மற்றொரு ஷாருக்கிற்கு ரூ.5 லட்சத்திற்கு விற்றதாகவும் கூறினார். புதிய நபருடன் கோட்டா நகரில் 18 மாதங்கள் தங்கி இருந்ததும், சில நாட்களுக்கு முன் அவரிடமிருந்து தப்பியதாகவும் தெரிவித்தார்.
லலிதாவிடம் செல்போன் இல்லாததால் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது, விபத்தில் இறந்தவர் யார் என்ற மர்மம் மற்றும் தவறாக சிறையில் அடைக்கப்பட்ட நான்கு பேரின் நிலை குறித்து போலீசார் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!