மணிப்பூரில் மீண்டும் பயங்கரவாதிகள்அட்டூழியம்... பெண்களை கடத்திய கொடூரம்!

 

கடந்த ஆண்டு மே மாதம் முதல், மணிப்பூரில் உள்ள மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே மோதல்கள் வெடித்தன. இந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேநேரம் கடந்த சில மாதங்களாக மோதல் சற்று தணிந்த நிலையில் தற்போது மீண்டும் மோதல் அதிகரித்துள்ளது.

சமீபத்தில், இளம்பெண் ஒருவர், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, உயிருடன் எரிக்கப்பட்டார். வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, நேற்று பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸார் நடத்திய அதிரடி என்கவுன்டரில் 11 குக்கி பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இன்று மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேரை குக்கி பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். 60, 31, 25 வயதுடைய 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்டவர்களில் 6 மாத குழந்தையும் உள்ளது. இதற்கிடையில், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 2 ஆண்கள் (வயது 76 மற்றும் 54) குக்கி பயங்கரவாதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டனர். இந்த சம்பவங்களால் ஜிரிபாம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!