தொடரும் சோகம்... ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 16 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்பு!

 
நாடு முழுவதும் தொடரும் சோகமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவர், சிறுமியர் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை சரிவர மூடாததாலும், ஆழ்துளை கிணறுகளை தோண்டும் போதும் பாதுகாப்புடன் அவற்றை மூடி பராமரிக்காததாலும் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த அதிர்ச்சியாக ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் ஒருவன் 16 மணி நேர போராட்டத்திற்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பரலியா கிராமத்தில் வசித்து வருபவர் கலுலால்.  இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. அதில் தண்ணீர் வராததால் அந்த கிணறை அப்படியே மூடாமல் விட்டு விட்டனர். 

இந்நிலையில் கலுலாலின் 5 வயது மகன் பிரகலாத்  விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென சிறுவன் அந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து விட்டான்.இச்சம்பவம் குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த  தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர்  சுமார் 32 அடி ஆழம் இருந்த அந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  

இந்நிலையில் சுமார்  16 மணி நேரமாக மீட்பு பணிகள் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை சிறுவனை மீட்டனர். ஆனால் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?