இன்று வாக்குப்பதிவு துவங்கியது... ஜார்கண்ட் சட்டசபைக்கு முதற்கட்டமாக 43 தொகுதிகளில் தேர்தல்... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!
ஜார்கண்ட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 43 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்க துவங்கினார்கள்.
ராஞ்சி, ஜார்கண்ட் மாநிலத்தில் 81 இடங்களை கொண்ட சட்டசபைக்கு இன்று நவம்பர் 13 முதற்கட்ட வாக்குப்பதிவும் நவம்பர் 20ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு என இருகட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 43 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தியது. முதற்கட்டமாக 43 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று நவம்பர் 13ம் தேதி புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வரிசையில் நிற்கின்றனர். இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது.
முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 43 தொகுதிகளில் மொத்தம் 685 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலுடன் கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடக்கிறது. ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்காவும், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பி சத்யன் மெகோரியும், பா.ஜனதா சார்பில் நவ்யா அரிதாஸ் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். இதே போல் மத்தியபிரதேச மாநிலம் விஜய்பூர், புத்தினி சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!