தலைகுப்புற பேருந்து கவிழ்ந்து கோர விபத்து... 25 பேர் படுகாயம்!

 

உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் தொழிலாளர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 25 பேர் காயமடைந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பரேலி மாவட்டத்தில் உள்ள நவாப்கஞ்ச் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து பீகாரில் உள்ள ஒரு சூளைக்கு சுமார் 60 தொழிலாளர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

பாலிபிட்டில் உள்ள பல்ராம்பூர் சௌகி அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது, ​​கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் அருகே கவிழ்ந்தது. இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில், ருக்ஸானா மற்றும் ஜன்னதி பேகம் ஆகிய இரு பெண்கள் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மீதமுள்ளவர்கள் புரான்பூரில் உள்ள சமூக நல மையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!