தூள்... கொண்டாட்டம் ஆரம்பம்... பொங்கல் ரேஸில் தனுஷ் - சிவகார்த்திகேயன் நேரடி போட்டி... சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி! அரசாணை வெளியீடு!

 

தமிழகத்தில் பொங்கல் பண்டிக்கை கொண்டாட்டங்கள் துவங்கியுள்ள நிலையில், பொங்கல் ரிலீஸ் படங்களான அயலான் மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளை வெளியிட அனுமதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட தலைவர் ரஜினியின் ’லால் சலாம்’ படம் போட்டியில் இருந்து விலகி உள்ளது.

லால் சலாம் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகி உள்ள நிலையில், அயலான் படத்திற்கும், கேப்டன் மில்லர் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நண்பர்களாக இருந்த தனுஷ், சிவகார்த்திகேயன் கடந்த சில வருடங்களாகவே போட்டி போட்டு, பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வரும் நிலையில், இந்த வருட பொங்கலுக்கு இவர்களின் படங்கள் நேரிடையாக மோதிக் கொள்கின்றன.

ரிலீஸ் தனுஷ், பிரியங்கா நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, வரும் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 பொங்கலுக்கு வெளியாக உள்ள அயலான் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அயலான் படத்திற்கு 12 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வழக்கமான திரையிடப்படும் காட்சிகளை விட 2 காட்சிகள் கூடுதலாக திரையிட தமிழக அரச் அனுமதி அளித்துள்ளது. ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'அயலான்'. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!