யமுனையாற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல் - ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் யமுனை ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், நிவாரண உதவிகளையும் அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள பிருந்தாவனத்தில், நேற்றுமதியம் யமுனை நதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து புனிதப் பயணம் மேற்கொண்டு பிருந்தாவனத்திற்கு வந்திருந்த 30-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், கேசி காட் பகுதியில் படகு சவாரி செய்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்த பயணம், மரணப் பயணமாக மாறியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பலத்த காற்று வீசியதால் கட்டுப்பாட்டை இழந்த படகு, நதியின் குறுக்கே இருந்த தற்காலிக மிதவைப் பாலத்தின் மீது மோதியதில், ந் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பயணிகள் அனைவரும் அலறியபடி நதிக்குள் விழுந்தனர். இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்டிஆர்எஃப் மற்றும் என்டிஆர்எஃப் குழுவினர், உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் தீவிர மீட்புப் பணியில் இறங்கினர். இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 6 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் அடங்குவர். இன்னும் சிலர் காணாமல் போயுள்ளதால், யமுனை நதியின் ஆழமான பகுதிகளில் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விபத்து குறித்துத் தகவல் அறிந்த பிரதமர் மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சையில் இருப்பவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும்.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "மதுராவில் நிகழ்ந்த படகு விபத்து ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உள்ளூர் நிர்வாகம் வழங்கி வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத் தலமான மதுராவில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி அதிகப்படியான ஆட்களை ஏற்றிச் சென்றதே இந்த விபத்துக்குக் காரணமா? என்கிற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். புனிதப் பயணம் சென்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் ஜலசமாதியான சம்பவம் பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்