10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
சென்னை வானிலை மையம் தகவல்படி, குமரிக்கடல் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (13-01-2026) தென்தமிழகம் மற்றும் சில வடதமிழக பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை வீசும் வாய்ப்பு உள்ளது. சென்னை வானிலை மையத்தின் தகவல்படி, இரவு 7 மணி வரை கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
அதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் முன்னெச்சரிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். இடி, மின்னலுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்பு காரணமாக வெளியில் செல்லும் போது பாதுகாப்பு எச்சரிக்கை பின்பற்றுமாறு வானிலை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!