undefined

அயோத்தியில் 10 அடி உயரத்தில் தங்கம், வைரங்களால் புதிய ராமர் சிலை... தஞ்சை கலைஞர்கள் கைவண்ணம்!

 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் வளாகத்தை மேலும் மெருகூட்டும் வகையில், தங்கம் மற்றும் நவரத்தினங்களால் ஆன ஒரு பிரம்மாண்டமான ராமர் சிலை கர்நாடக பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிலை சுமார் 10 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்டது. இது தற்போது கருவறையில் உள்ள ராமர் சிலையைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்கம் போல் ஜொலிக்கும் இந்த சிலை, வைரம், மரகதம் உள்ளிட்ட விலை உயர்ந்த ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ₹25 கோடி முதல் ₹30 கோடி வரை இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சிற்பக்கலை நுட்பங்களைப் பயன்படுத்தி, தஞ்சாவூரைச் சேர்ந்த மிகச்சிறந்த கலைஞர்களால் இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலிருந்து சிறப்பு வாகனம் மூலம் சுமார் 1,750 கிலோமீட்டர் தூரத்தை 6 நாட்கள் கடந்து இந்தச் சிலை பாதுகாப்பாக அயோத்திக்குக் கொண்டு வரப்பட்டது. தற்போது இது கோவில் வளாகத்திற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

துளசிதாஸ் கோவிலுக்கு அருகில் உள்ள 'அங்கத் டிலா' என்ற பகுதியில் இந்தச் சிலையை நிறுவ கோவில் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. விரைவில் நாடு முழுவதிலும் உள்ள மடாதிபதிகள் மற்றும் மகான்கள் முன்னிலையில் இதற்கான பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.

ஏற்கனவே கருவறையில் உள்ள 'பால ராமர்' சிலை உலகப் புகழ் பெற்ற நிலையில், தென்னிந்தியக் கலை நுட்பத்துடன் தங்கம் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்ட இந்த புதிய சிலை, அயோத்திக்கு வரும் பக்தர்களுக்குக் கூடுதல் ஆன்மீக ஈர்ப்பாக அமையும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!