பெண் தொழில் முனைவோர்களுக்கு ரூ10 லட்சம் கடன்... விண்ணப்பிக்கும் முறை!
தமிழகத்தில் பெண்கள் தொழில் துறையில் முன்னேறுவதற்கு அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் சுயதொழில் துவங்க ஆர்வமாக உள்ளனர் என்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களை தொழில் முனைவோராக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் தொழில் வணிக ஆணையரகம் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிறது. ஆண்டுதோறும் 20,000 பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் வழங்கப்பட உள்ளது. மேலும் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை 25% மானியமும் கிடைக்கும். தொழில் முனைவோர் பயிற்சி, தொழில் பதிவு, சந்தைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் பேம்-டி.என். நிறுவனம் அளிக்கவுள்ளது.
18 முதல் 55 வயதுக்குள், ரேஷன் கார்டில் பெயர் உள்ள பெண்கள் யாரும் விண்ணப்பிக்கலாம். உற்பத்தி, சேவை, வணிகம் ஆகிய துறைகளில் தொழில் தொடங்கலாம். கடந்த 10 நாட்களிலேயே 5,631 பேர் விண்ணப்பித்த நிலையில், 1,891 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில் 65 பேரின் பெயர் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க: www.msmeonline.tn.gov.in
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!