சட்டமன்ற தேர்தலுக்கு விஜய் அதிரடி… 10 பேர் பிரச்சாரக் குழு அறிவிப்பு!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில், தேர்தல் பிரசாரப் பணிகளை முன்னெடுக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த பிரசாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்காக 10 பேர் கொண்ட தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் N.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பார்த்திபன், ராஜ்குமார், விஜய் தாமு, செல்வம், பிச்சைரத்தினம் கரிகாலன், செரவு மைதின் (எ) நியாஸ், கேத்ரின் பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அனுபவம் மற்றும் ஒருங்கிணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் பிரசாரக் கூட்டங்களை நடத்தும். தேர்தல் பணிகள் விரைவில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!