undefined

10ம் வகுப்பு தேர்வுக்கு சென்ற மாணவன் பேருந்திலிருந்து தவறி விழுந்து பலி!  

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவன் புவியரசு இன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேங்கடாகுளம் பகுதியில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த அவர், பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வுக்காக காலையில் தனியார் பேருந்தில் சென்றார். குப்பக்குடி வளைவில் பேருந்து திரும்பிய போது தவறி விழுந்து தலையில் கடுமையாக காயமடைந்தார்.

அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்து மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்கச் செய்தது. பின்னர் உடல் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

சம்பவம் குறித்து ஆலங்குடி காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பேருந்தை பறிமுதல் செய்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குடியில் இருந்து செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி நேரங்களில் அரசு பேருந்துகள் அதிக அளவில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!