undefined

அரசு பள்ளியில் 100% தேர்ச்சி ... மாணவர்கள், ஆசிரியர்களை ஊட்டிக்கு சுற்றுலா அனுப்பி வைத்த  எம்எல்ஏ!

 
புதுச்சேரி பாகூர் தொகுதிக்கு எம்.எல்.ஏ. செந்தில்குமார், தனது தொகுதிகுட்பட்ட கீழ்பரிக்கல்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் தனது சொந்த செலவில் ஊட்டிக்கு இரண்டு நாள் சுற்றுலா அனுப்பி வைத்தார். 

ஊட்டியில் மாணவர்களும், பள்ளியின் ஆசிரியர்களும் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.

இது குறித்து எம்எல்ஏ செந்தில் குமார் பேசுகையில், “கீழ்பரிக்கல்பட்டு அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தேன். அப்போது 10ம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடினேன். பொதுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த அவர்களை ஊக்குவித்து பேசும் போது, அவர்களின் ஆசையை கேட்டேன். 100 சதவீத தேர்ச்சி பெற்றால் சுற்றுலா‌ அழைத்து செல்ல ஏற்பாடு செய்து தருவதாக அப்போது உறுதி அளித்திருந்தேன். 

தற்போது, தேர்வு முடிவுகள் வந்தவுடன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டேன். அவர்கள் ஊட்டி செல்ல விரும்பியதால் அனுப்பி வைத்தேன்" என்று தெரிவித்தார்.

"எம்எல்ஏ அவரது சொந்த செலவில் 28 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்கள் என 34 பேர் கொண்ட குழுவை, தனி வாகனத்தில் ஊட்டிக்கு சுற்றுலா அனுப்பி வைத்தார். இந்த சுற்றுலாப் பயணத்தின் போது மாணவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், தொட்ட பெட்டா, படகு இல்லம், அரசு அருங்காட்சியகம், தேயிலை தொழிற்சாலை போன்ற முக்கிய சுற்றுலா தலங்களை பார்த்து மகிழ்ந்தனர். இது மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது” என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது