பொங்கலை முன்னிட்டு 1000 போலீசார் பாதுகாப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் கண்ணன் தெரிவித்துள்ளார். கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று மாலை முதல் 18-ம் தேதி வரை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். சுற்றுலா தலங்கள், கோயில்கள், வணிக வளாகங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக கூடும் என்பதால் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கினார்.
மாநகரின் முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுற்றுலா இடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். கூட்டம் அதிகமாக கூடும் பகுதிகளில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் கண்காணிக்கப்படுகின்றன.
குற்றங்களை தடுக்கும் வகையில் மாநகர எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனைகளும் நடத்தப்படுகின்றன. போதை பொருட்கள் தடுப்பு மற்றும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தவும் சிறப்பு குழுக்கள் செயல்படுகின்றன. பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் பொங்கல் விழாவை கொண்டாட 1000 போலீசார் பணியில் இருப்பதாக கமிஷனர் கண்ணன் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!