undefined

 பாகிஸ்தான், ஈரான் நாடுகளில் இருந்து ஒரே நாளில் 10,000 ஆப்கன் மக்கள் வெளியேற்றம்!  

 
 

பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து ஆப்கன் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 10,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. லட்சக்கணக்கான ஆப்கன் மக்கள் இந்த இரு நாடுகளிலும் அகதிகளாகத் தஞ்சம் அடைந்திருந்தனர். இப்போது அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் அந்த நாடுகள் இறங்கி உள்ளன.

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 1,939 குடும்பங்களைச் சேர்ந்த 10,043 ஆப்கன் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இந்த விவரத்தை ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசே அறிவித்துள்ளது. வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானின் ஹெராத், கந்தாஹார், நிம்ரோஸ் போன்ற பகுதிகளுக்குத் திரும்பி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் நடந்த உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிர் பிழைக்க அண்டை நாடுகளுக்கு ஓடினார்கள். ஆனால், 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது. அதன் பிறகு பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் ஆப்கன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளன. இது உலக அரங்கில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!