பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000… ஆட்சி அமைந்தால் குடும்பத்துக்கு ரூ.10,000 .. எடப்பாடி !
சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மூன்றாம் கட்ட தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தைப்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை மாற்றி அதிமுக அரசு அமைந்தால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும் என்றார்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்றும், 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார். மீன்பிடித் தடை கால நிவாரணம் ரூ.8,000 இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்படும் எனவும் கூறினார். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வீட்டு வரி மற்றும் குடிநீர் கட்டண உயர்வு மக்களுக்கு சுமையாக உள்ளதாகவும் விமர்சித்தார்.
கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தப்படும். விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாக அதிகரிக்கப்படும். நகரங்களில் நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் பழனிசாமி அறிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!