மின்கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து... 10ம் வகுப்பு மாணவன் தீயில் கருகி பலி!
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ஓரம்பேடு கிராமத்தில் மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவன் ஸ்ரீனிவாசன் தீயில் சிக்கி அலறித் துடித்தார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால் தீ வேகமாக பரவி குடிசை வீடு இடிந்து விழுந்ததால் சிறுவன் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டார்.
இதில் ஸ்ரீனிவாசன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!