undefined

கடும் பனிமூட்டம்: சென்னையில் 11 விமானங்கள் ரத்து... பயணிகள் அவதி!

 

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், வட இந்தியாவில் நிலவும் அடர் பனிமூட்டம் காரணமாக விமானங்களை இயக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் காசியாபாத் போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டிய மற்றும் அங்கிருந்து சென்னை வர வேண்டிய விமானங்களின் அட்டவணை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களுக்குப் புறப்பட வேண்டிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல், டெல்லி, கொல்கத்தா, பாட்னா, புனே, இந்தூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய 7 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னறிவிப்பு இன்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். இது தவிர, வட மாநிலங்களுக்குச் செல்லும் மேலும் பல விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இது குறித்துத் தெரிவிக்கையில், டெல்லி விமான நிலையத்தில் நிலவும் மிகக் குறைந்த கண்பார்வை தூரம் (Low Visibility) மற்றும் காற்று மாசு காரணமாக விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் சிக்கல் நீடிப்பதாகக் கூறியுள்ளனர். மோசமான வானிலை காரணமாக டெல்லி செல்ல வேண்டிய விமானங்கள் வேறு நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டதும் இந்த பாதிப்பிற்குக் காரணமாக அமைந்தது. இதனால் சென்னை மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களில் இன்றும் விமான சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!