undefined

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் விண்ணப்பம் - பிப்ரவரியில் இறுதிப் பட்டியல்!

 

தமிழகத்தில் புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும், விடுபட்டவர்களை இணைக்கவும் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்புப் பணிகளில் இதுவரை 11.71 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலின்படி, தமிழகத்தில் சுமார் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் பெயர் நீக்கப்பட்டவர்களும், புதிதாக 18 வயது பூர்த்தியானவர்களும் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டினர்.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன. 3, 4) தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த இரண்டு நாட்களில் மட்டும் பல லட்சம் பேர் நேரில் வந்து மனுக்களை அளித்தனர். விண்ணப்பிக்க கடைசி நாளாக ஜனவரி 18ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட 11,71,600 மனுக்களும் தேர்தல் அதிகாரிகளால் வீடு வீடாகச் சென்று சரிபார்க்கப்படும். திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

பெயர் சேர்க்கவோ அல்லது முகவரி மாற்றம் செய்யவோ விரும்பும் பொதுமக்கள் வரும் ஜனவரி 18ம் தேதி வரை ஆன்லைன் வழியாகவோ (Voters' Service Portal) அல்லது அந்தந்த பகுதி மண்டல அலுவலகங்களிலோ விண்ணப்பிக்கலாம். 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க இதுவே கடைசி வாய்ப்பாகும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!