undefined

பள்ளி வளாகத்தில் பாம்பு கடித்த  11-ம் வகுப்பு மாணவன் பலி... கதறித் துடித்த பெற்றோர்! 

 
 

திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் அருகே சேத்தனூரை சேர்ந்த விவசாயி முருகானந்தம்-ராதா தம்பதியினரின் மகன் சிவப்பிரகாசம் (17), அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பிப்.4-ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற அவர், மதிய இடைவேளையில் உணவு சாப்பிட டிபன் பாக்ஸை எடுத்தபோது அதில் இருந்த கட்டுவிரியன் பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆசிரியர்கள் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, மாணவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பல நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (பிப்.8) மாணவன் உயிரிழந்தார்.

இதற்கிடையில், பள்ளி வளாகத்தில் உள்ள அறையில் இருந்த புத்தகத்தை எடுக்கும்போது பாம்பு கடித்ததாக மாணவனின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அரித்துவாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!