ஒழுங்கா படி... மிரட்டிய தந்தை... 11ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள முட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மகள் ஜெயஸ்ரீ, அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் கொஞ்சம் சுட்டியாக இருக்க வேண்டும் என்கிற ஆசையில், "சரியாக படிக்கவில்லை" என்று தந்தை சக்திவேல் அந்தப் பெண்ணைச் சற்றுக் கடுமையாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. தந்தையின் கண்டிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்தச் சிறுமி, ஆத்திரத்தில் வீட்டில் இருந்த விஷத்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மயங்கிய நிலையில் இருந்த ஜெயஸ்ரீயை மீட்ட குடும்பத்தினர், உடனடியாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். நிலைமை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மருத்துவர்களின் இடைவிடாத போராட்டமும் பலன் தராமல், நேற்று முன்தினம் இரவு அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு சிறிய கண்டிப்பு, இப்படி ஒரு பிஞ்சு உயிரைப் பறிக்கும் என்று அந்தத் தந்தை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். "பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் சொன்னது, இப்படி விபரீதத்தில் முடிந்துவிட்டதே" என்று அந்தப் பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தேர்வு நேரங்களில் மாணவர்களுக்குக் கூடுதல் மன அழுத்தம் கொடுக்காமல், அன்போடு கையாள வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது. ஒரு சிறிய சொல்லுக்காக ஒரு மாணவியின் எதிர்காலமே அணைந்து போனது அப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!