சென்னை உட்பட 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இரவு நேரத்தில் சில பகுதிகளில் இடி–மின்னலும் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதனால் மாலையிலேயே சில பகுதிகளில் திடீர் மழை ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் இடி–மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!