undefined

 ஊஞ்சல் விளையாட்டு விபரீதம்... சேலையில் கழுத்து இறுக்கி 12 வயது சிறுவன் பலி !

 
 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் வீட்டில் விளையாடிய சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தேவி, தனது 12 வயது மகன் அனில்குமாருடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். அனில்குமார் இருங்காட்டுக்கோட்டை அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை தேவி வழக்கம்போல் அருகில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் இருந்த அனில்குமார் சேலையில் ஊஞ்சல் கட்டி ராட்டினம் போல சுற்றி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சேலையில் அவரது கழுத்து இறுகியதால் மயங்கி விழுந்தார்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அனில்குமாரை உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!