undefined

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி  தொடக்கம்... வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு !

 

தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. தேர்வு மையங்களில் அரசு வழிகாட்டி நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முதலில் துவங்குகிறது. தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்காணிப்புக்காக பறக்கும் படை மற்றும் முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான மின்விசிறி, குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை போன்ற வசதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க அறிவிப்புப் பலகைகள் பள்ளி நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!