undefined

சபரிமலை யாத்திரை சென்ற  வேன் வாய்க்காலில் கவிழ்ந்து   13 பேர் படுகாயம்!

 

 

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த குருசாமி சந்திரன் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவினர், கடந்த 28-ம் தேதி சபரிமலைக்கு யாத்திரை சென்றனர். ஐயப்பனை தரிசித்துவிட்டு, குற்றாலத்திற்கும் சென்று திரும்பிய இவர்கள், இன்று அதிகாலை திருச்செந்தூர் நோக்கி வேனில் வந்து கொண்டிருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் உறக்கத்திலிருந்த நிலையில், ராணி மகாராஜபுரம் விலக்கு பகுதியில் வந்தபோது வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த மின் கம்பம் மற்றும் மரங்கள் மீது பயங்கரமாக மோதி, அருகில் இருந்த வாய்க்காலில் தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்தின் கோரத்தால் வேனுக்குள் இருந்த பக்தர்கள் மரண பயத்தில் அலறினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அவ்வழியாகச் சென்றவர்கள், வேனின் ஜன்னல் கம்பிகளை அதிரடியாக உடைத்து உள்ளே சிக்கியிருந்தவர்களை ஒவ்வொருவராக மீட்டனர்.

இந்த கோர விபத்தில் பிரசாந்த், அபிஷேக், சந்திரன், ராகுல் உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பக்திப் பயணம் பாதியிலேயே விபத்தில் முடிந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!