undefined

 செல்போன் வாங்கித் தரல… மனமுடைந்த 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை ! 

 
 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் சங்கபூர் பகுதியில், செல்போன் வாங்கித் தர மறுத்த பெற்றோரின் முடிவால் மன உளைச்சலுக்கு ஆளான 13 வயது மாணவி தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் தம்பதியின் இரு மகள்களில் இளையவர், அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோரின் கைப்பேசியை பயன்படுத்தி அடிக்கடி கேம் விளையாடி வந்த சிறுமி, “தனக்கென புதிய செல்போன் வாங்கித் தர வேண்டும்” என்று பலமுறை கேட்டிருந்தார். ஆனால், 13 வயதுக்குள் தனிப்பட்ட செல்போன் தேவையில்லை என பெற்றோர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சிறுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவிலுக்கு சென்றிருந்த தாய் மற்றும் பெரிய சகோதரி வீடு திரும்பியபோது, சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!