"அமைதியாகச் சென்று வா மகனே.." ... 13 ஆண்டு கால கோமா...   கண்ணீருடன் விடை கொடுத்த பெற்றோர்... கனத்த தருணம்! 

 

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா, கடந்த 13 ஆண்டுகளாகக் கோமா நிலையில் மருத்துவப் படுக்கையிலேயே தனது வாழ்நாளைக் கழித்து வந்தார். 2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு, டெல்லி எய்ம்ஸ் (AIIMS) உள்ளிட்ட பல்வேறு முன்னணி மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இருப்பினும், அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. உணர்வற்ற நிலையில் இயந்திரங்களின் உதவியுடன் சுவாசித்து வந்த ஹரிஷ் ராணாவைத் தொடர்ந்து சிகிச்சையில் வைத்திருப்பது அவருக்கு மேலும் வலியைத் தரும் என்பதால், மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் அவருக்குக் கருணைக்கொலை  செய்ய நீதிமன்றம் மற்றும் மருத்துவக் குழு அனுமதி வழங்கியது.

கடந்த 13 ஆண்டுகளாகத் தங்கள் மகனை ஒரு குழந்தையைப் போலக் கண் இமைக்காமல் பராமரித்து வந்த அந்தப் பெற்றோரின் தியாகம் சொல்ல வார்த்தைகளே இல்லை. "என்றாவது ஒருநாள் அதிசயம் நடந்து மகன் கண் திறக்க மாட்டானா?" என்ற நம்பிக்கையிலேயே இத்தனை ஆண்டுகளை அவர்கள் கடந்துள்ளனர். இறுதியில் மகனிடம் விடைபெறும் போது, "அனைவரையும் மன்னித்துவிடு, அனைவரிடமும் மன்னிப்பு கேள்… இப்போது அமைதியாகச் செல்" என்று அவர்கள் கூறிய வார்த்தைகள் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. நீண்ட காலத் துயரத்திலிருந்து தனது மகனுக்கு இப்போது ஒரு நிரந்தர அமைதி கிடைக்கட்டும் என்பதே அந்தப் பெற்றோரின் தற்போதைய ஒரே பிரார்த்தனையாக உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்