undefined

13 வருட காதல்... ஆசிரியையை கொன்றது ஏன்.. இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!

 

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் அருகே, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றிய தற்காலிக ஆசிரியை காவியா (26) என்பவர், தனது காதலன் அஜித்குமாரால் கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொலையைச் செய்து விட்டுச் சரணடைந்த வாலிபர் அஜித்குமார், காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை, மேல களக்குடியைச் சேர்ந்த அஜித்குமார் (29), அதே ஊரைச் சேர்ந்த ஆசிரியை காவியா ஆகியோர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக உயிருக்கு உயிராகக் காதலித்து வந்தனர். ஆனால், காவியா, அஜித்குமாரைக் காதலிப்பது அவரது பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், காவியாவின் பெற்றோர் அவருக்குத் தங்களது உறவினர் ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, கடந்த நவம்பர் 23ம் தேதி நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர். நிச்சயதார்த்தம் குறித்துத் தனது காதலன் அஜித்குமாருக்குத் தெரிவிக்காமல் இருந்த காவியா, நேற்று முன்தினம் (நவம்பர் 27) இரவு 8 மணிக்கு வீடியோ கால் மூலம் பேசிய போது, இந்த அதிர்ச்சித் தகவலை அஜித்குமாருக்குத் தெரிவித்துள்ளார். மேலும், நிச்சயதார்த்தப் புகைப்படங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.

காவல்துறையினரிடம் சரணடைந்த அஜித்குமார் அளித்த வாக்குமூலத்தில், "நானும் காவியாவும் 13 வருடங்கள் ஒன்றாகப் பழகினோம். அவளைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என்று கனவு கண்டேன். ஆனால் எங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவிப்பதால், அத்தை மகனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் காவியா என்னிடம் கூறியது எனக்குப் பேரிடியாக இருந்தது."

"நம்மோடு இத்தனை ஆண்டுகள் பழகிவிட்டு, இப்போது வேண்டாம் என்று கூறியதால் எனக்குக் கடும் ஆத்திரமும், ஏமாற்றமும் ஏற்பட்டது. எனக்குக் கிடைக்காத காவியா வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் மனதில் எழுந்தது. விடிய விடியத் தூங்காமல் தவித்தேன்."

மறுநாள் காலை பள்ளிக்குச் ஸ்கூட்டரில் சென்ற காவியாவை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே அஜித்குமார் வழிமறித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரம் தலைக்கேறியதால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியாவின் தலையில் சரமாரியாகக் குத்தி, கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டதாக அஜித்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக அம்மாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அஜித்குமாரைக் கைது செய்துள்ளனர். அஜித்குமாருக்கு அதிகபட்சத் தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்துவோம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!