நைஜீரியாவில் பயங்கரவாதிகளிடமிருந்து 130 பள்ளிக்குழந்தைகள் மீட்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ‘பண்டிட்ஸ்’ எனப்படும் கடத்தல் கும்பல்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தி பணம் பறிக்கும் இந்த கும்பல்களை நைஜீரியா அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. சமீப நாட்களாக பள்ளிக்குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், நைஜர் மாகாணம் பம்பிரி நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் கடந்த மாதம் 21ம் தேதி துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் ஆசிரியர்கள், மாணவர்கள் என 315 பேரை கடத்திச் சென்றனர். இதையடுத்து ராணுவம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதில் 50 குழந்தைகள் தப்பினர். தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் 101 குழந்தைகளை பயங்கரவாதிகள் விடுதலை செய்தனர்.
இந்நிலையில், ராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கையில் மேலும் 130 பள்ளிக்குழந்தைகள் நேற்று மீட்கப்பட்டனர். இன்னும் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், பள்ளிக்குழந்தைகள் யாரும் பணய கைதிகளாக இல்லை என அதிபர் பயோ தெரிவித்துள்ளார். இந்த மீட்பு நடவடிக்கை நைஜீரியாவில் சிறிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!