சென்னை உட்பட 14 மாவட்டங்களில் கனமழை... வெதர்மேன் !
தமிழகத்தில் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் 'கத்திரி' வெயில் தொடங்கியுள்ளது. சாதாரணமாக இந்த காலகட்டத்தில் வெயில் மண்டையை பிளக்கும். நடப்பாண்டை பொறுத்தவரை அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இதன்காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மே 23 ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை,கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடல் காற்று வீசும் என்பதால் வெப்பநிலை தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவத் தொடங்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!