சென்னையில் வாக்காளர் பட்டியலில் 14.25 லட்சம் பேர் நீக்கம்!
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் சுமார் 14.25 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த வரைவு பட்டியலை வெளியிட்டது. எதிர்பாராத அளவில் பெயர்கள் நீக்கப்பட்டதால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னையில் முகவரி மாற்றம், இரட்டை பதிவு, நீண்ட காலம் வாக்களிக்காதவர்கள் உள்ளிட்ட காரணங்களால் இந்த நீக்கம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இது வரைவு பட்டியல் மட்டுமே என்றும், திருத்தங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் உரிய ஆவணங்களுடன் ஆட்சேபனை தெரிவித்து மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்தால் பெயர்கள் சேர்க்கப்படும் என தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. இறுதி பட்டியல் வெளியாகும் முன் வாக்காளர்கள் தங்கள் பெயர் நிலையை சரிபார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!