தொடரும் விபரீதம்... ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சம் இழப்பு... இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பெரும் தொகை பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாரமங்கலம் அருகே கருக்கல்வாடி சஞ்சீவிராயன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் 28 வயது பிரகாஷ்ராஜ் . இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சுகன்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார்.
திருமணத்திற்கு முன்பே பிரகாஷ்ராஜ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் பழக்கம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதனால் ரூ.15 லட்சம் வரை பணத்தை இழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பழக்கத்தை கைவிடுமாறு மனைவி சுகன்யா பலமுறை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மனவேதனையில் இருந்த பிரகாஷ்ராஜ் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். பின்னர் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!