undefined

தமிழகத்தில் 156  சதவீதம் கூடுதல் மழை...  !

 

தமிழ்நாட்டில் அக்டோபர் 16-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை இன்று முழுமையாக நிறைவு பெற்றது. 96 நாட்கள் நீடித்த இந்த மழைக்காலத்தில் வங்கக்கடலில் உருவான மூன்று புயல்கள் தமிழகத்தில் கனமழையை ஏற்படுத்தின. இதனால் இந்த ஆண்டு மழைப்பொழிவு வழக்கத்தை விட அதிகமாக பதிவானது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, தமிழகம் முழுவதும் இயல்பை விட 156 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது அதிக மழையாகும். நீர்நிலைகள் நிரம்பின. விவசாயம் பலன் பெற்றது. மின்சார உற்பத்திக்கும் இந்த மழை உதவியாக அமைந்தது. சென்னையில் மட்டும் இயல்பை விட 7 சதவீதம் அதிக மழை பதிவானது.

வடகிழக்கு பருவமழை விலகியதால் தற்போது தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவுகிறது. 21-ம் தேதி வரை வறண்ட நிலை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 23 முதல் 25-ம் தேதி வரை ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் இருக்கலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!