undefined

 1.6 கோடி அமெரிக்கர்கள் மருத்துவ காப்பீட்டை இழக்கும்  அபாயத்தில் உள்ளனர்... ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த ஒபாமா! 

 
 


அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. இவர், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்த மசோதா, Medicaid எனப்படும் மருத்துவ உதவி திட்டத்திற்கு அரசு வழங்கும் நிதியைக் குறைப்பதோடு, ஒபாமாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை   பலவீனப்படுத்துவதாக உள்ளதாக முன்னாள் அதிபர்  ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி இந்த மசோதா நிறைவேறினால், சுமார் 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் மருத்துவ காப்பீட்டை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும்  ட்ரம்பின் குடியரசுக் கட்சி, சமீபத்தில் அறிமுகப்படுத்திய வரி குறைப்பு நடவடிக்கைகளால் அரசுக்கு ஏற்பட்ட பணப் பற்றாக்குறையை சமாளிக்க, Medicaid திட்டத்திற்கான நிதியை குறைக்க இந்த மசோதாவை முன்மொழிந்துள்ளது.


Medicaid என்பது, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் ஒரு முக்கிய திட்டமாகும். இந்த மசோதா, மருத்துவமனை செலவுகள், மருந்துகள் மற்றும் பிற மருத்துவ சேவைகளுக்கு உதவி பெறும் மக்களை நேரடியாக பாதிக்கும். ஒபாமா, இந்த மசோதா மக்களின் அடிப்படை மருத்துவ உரிமைகளை பறிக்கும் என விமர்சித்துள்ளார்.  மலிவு விலை பராமரிப்புச் சட்டம், ஒபாமாவின் ஆட்சியில் (2010) கொண்டுவரப்பட்ட ஒரு முக்கிய சட்டமாகும். இது கோடிக்கணக்கான அமெரிக்கர்களுக்கு மலிவு விலையில் மருத்துவ காப்பீடு வழங்கி, சுகாதார அமைப்பை மேம்படுத்தியது.

ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் இந்த சட்டத்தை பலவீனப்படுத்துகிறது.  Medicaid நிதி குறைப்பு, இந்த சட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களுக்கு மருத்துவ சேவைகளை அணுகுவதை கடினமாக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். இதன் மூலம் ஏழை மற்றும் புலம்பெயர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.  இதன் மூலம் அமெரிக்காவில் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே பெரும் மோதல் ஏற்படலாம்.  
ட்ரம்ப்  இந்த மசோதாவை நிதி ஒழுங்குமுறையை மேம்படுத்தும் முயற்சியாக கூறுகிறார்.  ஆனால் ஒபாமா மற்றும் எதிர்க்கட்சியினர் இதை மக்களின் சுகாதார உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒபாமா, இந்த மசோதாவை எதிர்ப்பது மக்களின் நலனை காக்கும் முக்கிய படியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.   

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது