undefined

மாடுகளுக்கான மருந்தை தவறுதலாக  குடித்த 16 வயது சிறுவன் பலி!

 

சத்தர்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வீட்டில் வைத்திருந்த மருந்துகளில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, 16 வயது சிறுவன் கால்நடைகளுக்கான வீரியம் மிக்க மருந்தை தவறுதலாக குடித்து உயிரிழந்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக மருந்து எடுத்துக்கொள்ள முயன்ற அந்த சிறுவன், மனிதர்களுக்கான மருந்தும் மாடுகளுக்கான மருந்தும் ஒரே இடத்தில் வைத்திருந்ததால் தவறான மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது. மருந்து எடுத்த சில நேரத்திலேயே அவரது உடல்நிலை மோசமடைந்தது.

உடனடியாக குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிறுவனை காப்பாற்ற முடியாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!