விஷம் கலந்த குடிநீரை குடித்ததால் பெரும் சோகம்… 17 ஆடுகள் பலி!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிநீரில் விஷம் கலந்ததால் 17 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யார் விஷம் கலந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடுகளை இழந்த குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
மூலப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீரங்கசாமி மற்றும் அவரது மனைவி பழனாத்தாள் தங்களது தோட்டத்தில் 25 ஆடுகளை வளர்த்து வந்தனர். வழக்கம்போல் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு இரவு தூங்கினர். நேற்று காலை மேய்ச்சலுக்காக திறந்த பின்னர் ஒரு மணி நேரத்தில் 17 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பட்டி அருகே இருந்த தண்ணீர் தொட்டிகளில் ஒன்றில் கருப்பு நிற நெடி கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கால்நடை மருத்துவத்துறையினர் வந்து இறந்த ஆடுகளை பரிசோதித்து புதைக்க அறிவுறுத்தினர். விஷம் கலக்காத மற்றொரு தொட்டியில் தண்ணீர் குடித்த 8 ஆடுகள் உயிர் தப்பியது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக விஷம் கலந்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!