18 மாதக் குழந்தைக்கு காலில் ஆணியடித்து  சிகரெட் சூடு   ... காஸாவில் அரங்கேறிய கொடூரம்! 

 


காஸா முனையில் நடந்து வரும் போரின் கோர முகத்தை வெளிப்படுத்தும் வகையில், 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. மத்திய காஸாவின் அல்-மகசி அகதிகள் முகாம் அருகே, கரீம் அபு நாசர் என்ற கைக்குழந்தையை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கொடூரமாகத் தாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

கடந்த மார்ச் 21 அன்று, தனது தந்தை ஒசாமா அபு நாசருடன் சென்று கொண்டிருந்தபோது, இஸ்ரேல் ராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட அந்தக் குழந்தை, சுமார் 10 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மீட்கப்பட்ட அந்தப் பிஞ்சுக் குழந்தையின் உடலில் சிகரெட் சூடு வைக்கப்பட்ட காயங்கள் இருந்ததாகவும், காலில் ஆணி அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாகவும் குழந்தையின் தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். தந்தையை நிர்வாணப்படுத்தி, அவரிடம் வாக்குமூலம் வாங்குவதற்காகக் குழந்தையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி இந்த அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொடூரச் செயலுக்கு ஐநா சிறப்புத் தூதர் பிரான்செஸ்கா அல்பானீஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஒரு தந்தையை மனரீதியாக உடைக்கக் குழந்தையைப் பயன்படுத்துவது மனிதநேயமற்ற செயல்" என அவர் சாடியுள்ளார். கடந்த 2023 அக்டோபர் முதல் இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 18,500 பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சிறைகளில் உணவு மறுப்பு மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்துச் சர்வதேச அளவில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!