புத்தாண்டு கொண்டாட்டத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயின் மருத்துவச் செலவிற்காக பணம் தேவைப்பட்ட நிலையில், அந்த இளம்பெண் ஜாகூர் என்ற நிலத்தரகரிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் அவர் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து சமீர் என்ற பெயரில் பழகியுள்ளார்.
டிசம்பர் 31-ம் தேதி இரவு நிதியுதவி தருவதாக கூறி அந்தப் பெண்ணை நேரு நகர் பகுதிக்கு வரவழைத்துள்ளார். பின்னர் சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வறுமையை பயன்படுத்தி இந்த கொடூரம் நடந்தது என தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட இளம்பெண் உடனடியாக அவசர காவல் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை மீட்டனர். தலைமறைவான ஜாகூரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!