undefined

8 பேரை திருமணம் செய்த 19 வயசு கல்யாண ராணி தலைமறைவு... போலீசார் வலைவீச்சு!

 

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், திட்டமிட்டு பல ஆண்களைத் திருமணம் செய்து, அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துத் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீகாகுலம் மாவட்டத்தைச் சேர்ந்த வாணி (19) என்ற பெண்ணுக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தம்பதியினர் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, விசனிங்கபுரம் ரயில் நிலையத்தில் வாணி திடீரென மாயமானார். தனது மனைவி காணாமல் போனது குறித்து அதிர்ச்சியடைந்த கணவர், அவர் தனது அத்தை சந்தியாவின் வீட்டிற்குச் சென்றிருக்கலாம் எனத் தேடிச் சென்றுள்ளார்.

வாணியின் அத்தை வீட்டிற்குச் சென்றபோது, அங்கு வாணி மற்றும் அவரது அத்தை சந்தியா ஆகிய இருவருமே தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட கணவர் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன:

வாணி இதுவரை இதே பாணியில் மொத்தம் 8 பேரை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளார். வசதியான ஆண்களைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்வதும், சில நாட்களிலேயே நகை மற்றும் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தப்பிச் செல்வதையும் வாணி மற்றும் அவரது அத்தை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தத் திருமண மோசடிகளுக்குப் பின்னால் அவரது அத்தை சந்தியா மூளையாகச் செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

ஒரே பெண்ணால் 8 பேர் ஏமாற்றப்பட்ட தகவல் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள வாணி மற்றும் சந்தியாவைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இவர்களால் பாதிக்கப்பட்ட மற்ற நபர்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!