ஏர்கலப்பையில் உழுத போது மின்சாரம் தாக்கி 2 காளைகள் பலி!
Nov 22, 2025, 20:40 IST
திருத்தணி அருகே வீரகநல்லூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணன், இன்று காலை உழவு பணிக்காக தனது 2 காளைகளை கொண்டு வயலுக்கு சென்றார். பின்னர் ஏர் கலப்பையில் மாடுகளை இணைத்து நிலத்தை உழுது கொண்டிருந்தார்.
அப்போது வயல்வெளியை ஒட்டியிருந்த மின்கம்பத்திற்கு அருகில் சென்ற காளைகள், அந்த கம்பியை உரசியபடி சென்று கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. அதிர்ஷ்டவசமாக கண்ணன் மட்டும் உயிர்தப்பினார்.
இந்த சம்பவத்தால் கிராமத்தில் சோகநிலை ஏற்பட்டுள்ளது. இடத்துக்கு வந்த திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!