undefined

  2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில்  6 பேர் பலி... 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்! 

 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இன்று காலை ஏற்பட்ட பேருந்து விபத்து மக்கள் மனதை உலுக்கி விட்டது. செல்லச் செல்ல போட்டிப் போட்டுக்கொண்டு வந்ததாக கூறப்படும் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில், 5 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்கம் அதிகமாக இருந்ததால் பேருந்துகள் நொறுங்கிப் போன நிலையில், காயமடைந்தவர்களின் அலறல் அந்த பகுதியை முழுமையாக பதற்றத்தில் ஆழ்த்தியது.

விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து முழு வீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். சிறுவர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் இருந்ததால், 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிலரது உடல்நிலை தீவிரமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவமனை வளாகத்தில் அவசர பிரிவில் கூடுதல் மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பேருந்துகள் போட்டி ஓட்டம் காரணமாகவே இந்த கொடூர விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் துயரமும் அதிர்ச்சியும் நிலவுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து காரணங்களை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!