அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்!! வீதிகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்!!

 

நேற்று இரவு ஏப்ரல் 27ம் தேதி நேபாளத்தில் அடுத்தடுத்து 2  முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. பஜூரா மாவட்டத்தில் உள்ள தஹாகோட் பகுதியின் மையத்தில்  10 கிமீ ஆழத்தில் இவ்விரு நிலநடுக்கங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  முதல் நிலநடுக்கம் இரவு 11:58 மணிக்கு  4.9 ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம்  1:30 மணிக்கு 5.9 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளது. இதனை  நேபாளத்தின் சுர்கெட் மாவட்டத்தில் உள்ள நில அதிர்வு மையத்தின் அதிகாரி ராஜேஷ் ஷர்மா தெரிவித்திருக்கிறார்.  


நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் கடுமையாக குலுங்கின.  இதனால் தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டுவெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த 2  நிலநடுக்கங்களின் போது ஏற்பட்ட  உயிர்ச்சேதம்  அல்லது பொருட்சேதம் குறித்த  தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.  

முன்னதாக நேபாளத்தில் கடந்த 2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ம் தேதி 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று  ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில்  சுமார்  8,694 பேர் உயிரிழந்தனர்; சுமார் 21000 பேர் காயமடைந்தனர். அதன் பாதிப்பு சுவடுகளே மறையாத நிலையில்,  மீண்டும் அதே ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்டிருப்பதால்ல்  இந்த நிலநடுக்கம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!