ரூ.2 கோடி காப்பீடு ஆசை… கணவரை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது!
தெலங்கானா நிஜாமாபாத் மாவட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர் ரமேஷ் (35) கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மனைவி சவுமியா (30) அதே பள்ளியில் பணியாற்றிய பி.டி. மாஸ்டர் திலீப் (28) உடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்தார். கணவர் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர்கள், ரூ.2 கோடி காப்பீடு பணத்திற்காக கொலை செய்ய திட்டமிட்டனர்.
முதலில் விபத்து போல் கொல்ல முயன்றது தோல்வியடைந்தது. பின்னர் ரவுடி கும்பலை சேர்த்து ரூ.35 ஆயிரம் கொடுத்து திட்டம் தீட்டினர். கடந்த டிசம்பர் 19-ம் தேதி இரவு, ரமேஷுக்கு தூக்க மாத்திரை கலந்த தண்ணீர் கொடுத்து மயக்கமடையச் செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
மாரடைப்பு என நாடகமாடி உடலை அடக்கம் செய்தனர். ஆனால் வெளிநாட்டில் இருந்த ரமேஷின் தம்பி புகைப்படங்களில் கழுத்து காயத்தை பார்த்து போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் உண்மை வெளிவந்தது. சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, சவுமியா, திலீப் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!