இளம் பெண்ணை துரத்திய இளைஞர்கள்... கிராம மக்கள் சுற்றிவளைத்ததும் கிணற்றில் குதித்து பரபரப்பு!
கோவை சுல்தான்பேட்டை அருகே பெரியமந்திரிபாளையத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பஞ்சு ஆலையில் வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மது போதையில் இருந்த இரு வாலிபர்கள் பின்தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் இழிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. பயந்துபோன பெண், ஊருக்குள் நுழைந்ததும் அங்கிருந்த பொதுமக்களிடம் விவரத்தை தெரிவிக்க, கிராம மக்கள் உடனே ஒன்றுகூடி அவர்களைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஊரார் சுற்றிவளைத்ததை பார்த்த வாலிபர்கள், தப்பிச் செல்லும் முயற்சியில் அருகிலிருந்த 60 அடி ஆழமுள்ள திறந்தவெளி கிணற்றில் பாய்ந்து குதித்தனர். தண்ணீரில் மூழ்குவதற்கு முன் கிணற்றோர மரக்கிளையில் சிக்கிக் கொண்டு உயிர் தப்பினர். தகவல் பெறப்பட்டதும் சூலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கயிறு உதவியுடன் இருவரையும் பாதுகாப்பாக மேற்பரப்புக்கு மீட்டனர்.
விசாரணையில், மீட்கப்பட்டவர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்த சுரேஷ் (25) மற்றும் சரண் (22) எனத் தெரியவந்தது. மது போதையில் இருந்த இருவரையும் சுல்தான்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர்களிடையே போதைப் பழக்கம் அதிகரிப்பதால் பெண்களின் பாதுகாப்பு கவலைக்கிடமாக உள்ளது என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!