ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி.... இருவர் படுகாயம்!
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் வியாழக்கிழமை காலை பலியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விபத்தில் 5 பேர் பலியானதாகவும் இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கர்வால் கோட்ட ஆணையர் வினய் சங்கர் பாண்டே தெரிவித்துள்ளார்.
படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யும் என விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!