undefined

காய் பள்ளத்தில் பாய்ந்ததில் 2 இளம்பெண்கள் பலி... அமெரிக்காவில் இந்தியர்களுக்கு தொடரும் சோகம்!

 

அமெரிக்காவில், இந்தியாவைச் சேர்ந்த 2 இளம்பெண்கள் சென்றுக் கொண்டிருந்த கார், திடீரென பள்ளத்தில் பாய்ந்ததில் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டம் கர்லா மண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  மஹானா ராணி (24), புவனா (24). தோழிகளாக இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்த நிலையில், அமெரிக்காவில் நிகழ்ந்த கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்று, கலிபோர்னியாவில் உள்ள பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வந்த நிலையில், பட்டப்படிப்பை அங்கே வெற்றிகரமாக முடித்து விட்டு, தற்போது வேலை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று தங்கள் நண்பர்கள் மேலும் 4 பேருடன் காரில் அலபாமா பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து திரும்பும் போது மலைப்பாங்கான பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ராணி, புவனா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த 4 பேரை மீட்புக் குழுவினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த இளம்பெண்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அவர்களின் சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!