கட்சிக் கொடி அமைக்கும் போது மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி!
தஞ்சை அருகே திமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தபோது கட்சி கொடி அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தொழிலாளர்களான கார்த்திக் (45), கோகுல் (29) மீது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் கடுமையாக காயமடைந்தனர். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்யப்பட்டாலும், வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கியதற்கான காரணம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!